புதிய அரசியலமைப்பை உருவாக்க கோடிக்கணக்கில் செலவு: கணக்காய்வு அறிக்கையில் வெளியான தகவல்
நாடு பாரிய கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையிலும் புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணராமலேயே மூன்றாண்டுகளுக்கு 158 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
2020 ஒக்டோபர் 9 ஆம் திகதியில் இருந்து 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி வரை 38 குழுக் கூட்டங்களையும் 9 வெளித்தரப்பினருடனான கூட்டங்களையும் நடத்த 2,08,43,098 ரூபா செலவிடப்பட்டுள்ளதை கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கணக்காய்வாளரின் அறிக்கை
2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நீதி மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமைச்சு தொடர்பான கணக்காய்வாளரின் அறிக்கையிலே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்படாத மூன்று அலுவலக அறைகளுக்கு 8,16,480 ரூபாவும் அலுவலக உபகரணங்களுக்காக மேலும் 4,35,348 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட குழுவின் நிபுணர்கள் அமர்வு ஒன்றுக்கு 25,000 ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்காக செலவிடப்பட்ட தொகை 31 இலட்சம் ரூபாவாகும்.
மேலும் 1,25,000 ரூபா நிபுணர்களின் பயண செலவிற்காக செலவிடப்பட்டுள்ளது.
2020 ஒக்டோபர் முதல் 2021 டிசம்பர் வரை, பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தின் அலுவலகம் மற்றும் மண்டப வசதிகளுக்காக செலவிடப்பட்ட தொகை 47,68,200 ரூபா.
2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி குழு நியமிக்கப்பட்டு 15 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் அதன் பணி நிறைவடையவில்லை எனவும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 18 மணி நேரம் முன்

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri
