வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலால் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் கருகின(Photos)
திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டாங்குளம் பிரதேசத்தில் வீடொன்று தீப்பிடித்ததில் பல இலட்சம் பெறுமதியான பல பொருட்கள் தீயில் கருகி நாசம் அடைந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆண்டாங்குளம் குளக்கட்டு வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (03) நண்பகல் குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தீப்பற்றிய வீட்டில் 3 மோட்டார் சைக்கிள்களும் ஒரு குளிர்சாதனப் பெட்டி உட்பட 300 லீட்டருக்கும் அதிகமாகச் சேமித்து வைக்கப்பட்ட பெட்ரோல் கொள்கலன் உட்பட வீட்டின் ஒரு பகுதி முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தீப்பற்றிய வீடு தனியார் நிறுவனமொன்றின் களஞ்சியசாலையாக பயன்படுத்தப்பட்ட வீடு எனவும் தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், திருகோணமலை நகராட்சி மன்ற தீயணைப்பு படையினரின் முயற்சியில் தீப்பரவல் முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
தீப்பரவல் தொடர்பாக
மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
கிரக மாற்றங்களால் நவம்பரில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri