இலங்கையில் சிக்கலான மனிதாபிமான அவசரநிலை! வெளியாகியுள்ள தகவல்
இலங்கையில் குறைந்தபட்சம் 5.7 மில்லியன் மக்கள் அல்லது 26 சதவீதமான மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறதாக சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
உடனடி மனிதாபிமான உதவி மற்றும் அமைப்புகள், சேவைகள் மற்றும் வசதிகளின் பலவீனத்தை நிவர்த்தி செய்வதற்கான உரிய தலையீடுகள் இல்லாவிட்டால், இந்த எண்ணிக்கை பெருகும், அத்துடன் அதன் விளைவுகள் ஆழமடையும் என்று அறிக்கை எச்சரித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
அந்த அறிக்கையில் மேலும், பொருளாதார நெருக்கடியின் காரணமாக உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன.
அதே சமயம் மருத்துவமனை மகப்பேறு பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை சேவைகளான கல்வி மற்றும் சுகாதாரம் மற்றும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளின் அணுகல் மற்றும் கிடைப்பது சீர்குலைந்துள்ளது.
கல்வியில் ஏற்படும் பாதிப்புக்கு மேலதிகமாக, சிறுவர் பாதுகாப்பு அபாயங்களும் அதிகரித்துள்ளன. இயற்கை விவசாயத்தில் ஏற்பட்ட தோல்வியால், உள்நாட்டு விவசாய உற்பத்தியில் கடுமையான சரிவு நெருக்கடியை ஆழமாக்கியுள்ளது.
கடுமையாக சேதமடைந்த அமைப்புகள், சேவைகள் மற்றும் வசதிகளை (முக்கியமாக, விவசாயம் மற்றும் மீன்பிடித்தல், சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு மற்றும் கல்வித் துறைகள்) அவசரமாக மீட்டெடுக்கப்படாவிட்டால், ஏற்கனவே பாதிக்கப்படக் கூடியவர்கள் வறுமையை நோக்கிய பாதையில் மேலும் தள்ளப்படுவார்கள்.
சிக்கலான மனிதாபிமான அவசரநிலை
ஏற்கனவே உணவைக் குறைத்தல், மருத்துவப் பராமரிப்பை ஒத்திவைத்தல், பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாமை, வருமானத்துக்காக பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துவது மற்றும் சொத்துக்களை விற்பது போன்றவற்றுடன் மக்கள் இப்போது அடிக்கடி குற்றம் மற்றும் திருட்டு குற்றவாளிகளாகவோ மாறி வருகின்றனர்.
வேலை தேடி மக்கள் இடம்பெயர்கின்றனர், ஆள் கடத்தல் அதிகரித்து வருவதாகவும், குடும்பங்கள் தகர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சமூகம் மற்றும் குடும்ப மட்டத்தில், இலட்சக்கணக்கான மக்கள் உணவு, எரிபொருள், சமையல் எரிவாயு, மருந்து மற்றும் இதர அத்தியாவசியப் பற்றாக்குறையுடன் அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதாரச் சரிவு சிக்கலான மனிதாபிமான அவசரநிலையாக மாறியுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
