அரிசியை கட்டுப்பாட்டு விலையில் விநியோகிக்க ஆலை உரிமையாளர்கள் இணக்கம்
கட்டுப்பாட்டு விலையில், ‘லங்கா சதொச’ மூலம் தினமும் 200,000 கிலோகிராம் அரிசியை சந்தைக்கு வழங்க அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய (04) நாடாளுமன்ற அமர்வின் போது வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க ( Wasantha Samarasinghe) இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நுகர்வோர் அரிசியை 220 ரூபாய் விலையில் கொள்வனவு செய்ய முடியும் என சமரசிங்க தெரிவித்துள்ளார்
சதொச விற்பனை நிலையங்கள்
ஆலை உரிமையாளர்களுடனான கலந்துரையாடலின் போது, வங்கிகளில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆலைகளில் உள்ள அரிசியை சந்தைக்கு வெளியிட முடியாதுள்ளதாக என அவர்கள் கூறினர்.
இதனையடுத்து அந்த பிரச்சினைக்கான தீர்வை, அரசாங்கம் வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புறநகர் பகுதிகளில் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக ஒரு மில்லியன் தேங்காய்கள் 130 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் வர்த்தக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
