இலங்கையில் இருமடங்காக அதிகரிக்கப்படவுள்ள சில பொருட்களின் விலைகள்! வெளியானது அறிவிப்பு
இலங்கையில் மின் கட்டணம் பாரியளவு அதிகரிக்கப்பட்டதன் எதிரொலியாக பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பொருட்களின் விலைகள் இருமடங்காக அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சார கட்டண அதிகரிப்பின் எதிரொலி
மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்தமையே காரணம் என அதன் அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.
கால்நடை உற்பத்தியாளர்கள் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் மின்சாரக் கட்டண உயர்வால், குளிர்சாதனப் பெட்டிகளில் தங்களுடைய பொருட்களை வைப்பதற்கு பெரும் செலவினங்களைச் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.