மகிந்த ராஜபக்ச ஆரம்பித்த மிஹின் லங்கா விமான சேவை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்
2007ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச நிர்வாகத்தால் ஆரம்பிக்கப்பட்டு, 2016ஆம் ஆண்டு கைவிடப்பட்ட, குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான மிஹின் லங்கா தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிறுவனம் பாரிய நட்டத்தை சந்தித்ததுடன், பொது நிதியும் வீணடிக்கப்பட்டது. இதனையடுத்து, 2016ஆம் ஆண்டு விமான நிறுவனம் தனது செயற்பாடுகளை முடித்துக்கொண்டபோதும், செயற்பாட்டை முடிவுறுத்தும் செயன்முறை இன்னும் முழுமையடையாமல் உள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதே சமயம் இரண்டு அரசு வங்கிகள், குறித்த நிறுவனத்துக்கு வழங்கிய பில்லியன் கணக்கான ரூபாய் கடன்களை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் அதிகரித்த கடன்
2024 ஒக்டோபர் வரவு செலவு அறிக்கையின்படி, மிஹின் லங்கா இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு தலா 3.17 பில்லியன் ரூபாய்களை செலுத்த வேண்டும்.

பகுதி வட்டி செலுத்தப்பட்டாலும், அசல் தொகை இன்னும் செலுத்தப்படாமல் உள்ளது. ரூபாய் கடன்களுக்கு மேலதிகமாக மிஹின் லங்கா நிறுவனம், அமெரிக்க டொலரில் கடனை பெற்றிருந்தமையால், அது கடனை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri