வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏதிலிகள் இருவரின் தவறான முடிவு!
வியட்நாமில் ஏதிலிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.
இவர்கள் நேற்றிரவு தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை
தற்கொலைக்கு முயற்சித்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்கொலைக்கு முயற்சித்த மற்றுமொருவரின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ள போதிலும், அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு மீள அனுப்ப அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், தாம் நாட்டிற்கு மீள செல்ல தயார் இல்லை என தெரிவித்தே தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.
இலங்கைத் தமிழ் ஏதிலிகள் 303 பேருடன் கனடா நோக்கி பயணித்த மீன்பிடிப் படகு மூழ்கியதையடுத்து, அதில் பயணித்தவா்கள், சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு கடந்த (08.11.2022) வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட இலங்கை ஏதிலிகள் மூன்று குழுக்களாக பிரித்து, மூன்று முகாம்களில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு மீள திரும்ப போவதில்லை
தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு மீள திரும்ப போவதில்லை என தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் தெரிவித்துவருகின்றனர்.
வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை, கட்டாயம் நாடு கடத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தாம் இலங்கையை நோக்கி திரும்ப போவதில்லை என தெரிவித்து, இவ்விரு ஏதிலிகளும் தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுக்கடலில் கைவிடப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 14 மணி நேரம் முன்

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri
