பண்டிகை நாளில் வெடித்த ஏவுகணைகள்: ஈரானின் எச்சரிக்கையால் மக்கள் வெளியேற்றம்
ஈதுல் பித்ர் பண்டிகை அமைதியாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) நள்ளிரவில் நிகழ்ந்த ஏவுகணைத் தாக்குதல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஈதுல் பித்ர் பண்டிகை அமைதியாகக் கழியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று(21.03.2026) அதிகாலை நள்ளிரவைத் தாண்டிய சில நிமிடங்களில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன.
ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஐக்கிய அரபு இராச்சியத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்தபோது இந்தச் சத்தங்கள் உருவானதாக அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானின் அடுத்த எச்சரிக்கை
இந்தத் திடீர் தாக்குதலால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது. குறிப்பாக, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ராஸ் அல்-கைமா நகரம் விரைவில் இலக்கு வைக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த நகரத்தில் வசிக்கும் மக்கள் குறிப்பிட்ட பாதைகள் வழியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் இன்னும் முழுமையாக வெளிவராத போதிலும், ஈரானின் இத்தகைய தொடர் அச்சுறுத்தல்கள் அமீரகம் மற்றும் பிற வளைகுடா நாடுகளுக்கு (GCC) கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தச் சூழல், பாதுகாப்பு காரணங்களுக்காக வளைகுடா நாடுகளை அமெரிக்காவுடன் இன்னும் நெருக்கமான உறவை நோக்கித் தள்ளி வருகிறது.
யாழில் மாமியாரை கொலை செய்து வீசியெறிந்த மருமகன்: மகனின் முறைப்பாட்டில் வெளியில் வந்த திடுக்கிடும் தகவல்