வேகமாக அதிகரிக்கும் எரிபொருளின் விலை! வெளியான காரணம்
மத்திய கிழக்கில் நிலவி வரும் கடும் போர் பதற்ற நிலை எண்ணெய் விலையிலும் கடுமையான தாக்கத்தை செலுத்தியுள்ளது.
கடந்த வாரத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின்விலை 10 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது.
சர்வதேச தகவல்களின் அடிப்படையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்களினால், உலக எரிபொருள் விநியோகத்தில் பெரும் இடையூறு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகரிக்கும் எண்ணெய் விலை
இதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலை வெகுவாக அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மோதல் அதிகரிக்கும் பட்சத்தில் ஹோம்ஸ் ஜலசந்தி வழியாக எரிபொருள் போக்குவரத்து தடைபடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தற்போது சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.85 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.46 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri