கொடிய பேஜர் தாக்குதல்: அதிர்ச்சியளித்த நெதன்யாகுவின் அறிவிப்பு
கடந்த செப்டம்பர் மாதம் லெபனானிலும், சிரியாவிலும்(Lebanon and Syria) பெரும் பதற்றத்தை தோற்றுவித்த பேஜர் மற்றும் தொலைத்தொடர்புச் சாதன வெடிப்பு சம்பவங்களுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்றுள்ளது.
இந்த அறிவிப்பானது இஸ்ரேல் மீதான அச்சத்தை மத்திய கிழக்கு நாடுகளில் தோற்றுவிக்கும் என ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்நிலையில், லெபனானில் வெடித்த ஹிஸ்புல்லாவின் தகவல் தொடர்பு சாதனங்கள் மீதான கொடிய செப்டம்பர் தாக்குதலுக்கு தான் ஒப்புதல் அளித்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) சுட்டிக்காட்டியதை தொடர்ந்து குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
40 பேர் பலி
இந்த கொடிய தாக்குதலில் 40 பேர் பலியாகியதோடு ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்திருந்தனர்.

இதற்கமைய இஸ்ரேல் முதல் முறையாக இந்த நகர்வில் ஈடுபட்டதாக நெத்தன்யாகு ஒப்புக்கொண்டார்.
இதன்படி பேஜர் தாக்குதல்களுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, இஸ்ரேல் தெற்கு லெபனானில் தரைவழி நடவடிக்கையை அறிவித்தது.
மேலும், பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிழக்கு பெக்கா பள்ளத்தாக்கு, ஹிஸ்பொல்லாவின் கோட்டையாக கரதப்பட்ட இடங்களில் இஸ்ரேல் கடுமையான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan