இரத்து செய்யப்படும் விமானங்கள்: கவலை வெளியிட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்
கடந்த சில நாட்களாக தவிர்க்க முடியாத காரணங்களால் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டமைக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பல விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரத்து செய்ய வேண்டியிருந்தது.
இந்த சிக்கல்களை தீர்ப்பதற்கு விடாமுயற்சியுடன் செயற்பட்டு வருவதாகவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமம்
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என்றும், வாடிக்கையாளர்களின் பொறுமையை பெரிதும் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால் சிரமத்திற்கு உள்ளான பயணிகளுக்கு விமான நிறுவனங்களால் தேவையான உணவு மற்றும் தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், பயணிகள் வேறு விமானங்கள் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிக்கையொன்றினை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri