மத்திய கிழக்கு போரினால் எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி ஏற்படுமா!
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் மேகங்கள், இலங்கைக்கும் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என அரசியல் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக எரிபொருள் விநியோகம் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
எரிபொருள் இறக்குமதியில் சிக்கல்
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இது குறித்துக் கூறுகையில்,

உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் 20 சதவீதத்தை ஈரான் கட்டுப்படுத்துகிறது.
போர் நீடித்தால் எரிபொருள் இறக்குமதியில் சிக்கல் ஏற்படும் தற்போது மக்கள் பீதியடைந்து எரிபொருளைச் சேமிக்கத் தொடங்கியுள்ளனர் நிலைமையை அரசு சரியாகக் கையாளாவிட்டால் நாடு மீண்டும் ஒரு எரிபொருள் நெருக்கடிக்குள் தள்ளப்படும்.
தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதால் போதிய மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது என்றும், நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டால் அரசு மீண்டும் மின்வெட்டு அல்லது அதிக விலைக்கு எரிபொருள் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படும் என்றும் மரிக்கார் எச்சரித்துள்ளார்.
எதிர்காலப் பொருளாதாரம்
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறுகையில் இந்தப் போர் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் இலங்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றார்.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கின் அரசியல் மாற்றங்கள் மற்றும் போரின் தீவிரத்தைப் பொறுத்து இலங்கையின் எதிர்காலப் பொருளாதாரம் அமையவுள்ளது தற்போதைய சூழலில் பொதுமக்கள் பொறுப்புடன் செயல்படுமாறு அரசியல் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam