மத்திய கிழக்குக்கு பேராபத்தாக மாறி வரும் ஈரான்.. ட்ரம்ப் - ஸ்டார்மரின் அதிரடி தீர்மானம்!
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் வைத்திருக்கக்கூடாது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.
இதன்போது, இரு தலைவர்களும் மத்திய கிழக்கின் தற்போதைய மோசமான நிலைமை குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
அணுசக்தி திட்டம்
ஈரானின் அணுசக்தி திட்டத்தால் சர்வதேச பாதுகாப்புக்கு கடுமையான ஆபத்து ஏற்படும் எனவும் இருவரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நேற்று காலை அமெரிக்காவின் சுமார் 125 எண்ணிக்கையிலான B-2 விமானங்கள் ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்களை தாக்கின.
மத்திய கிழக்கில் ஈரான் - இஸ்ரேல் போர்பதற்றத்தின் அச்சுறுத்தலைக் குறைக்க ட்ரம்ப் மேற்கொண்ட குறித்த நடவடிக்கைகள் தொடர்பில் ட்ரம்ப் பிரதமர் ஸ்டார்மருடன் உரையாடியுள்ளார்.
இதற்கு மத்தியில், ஈரானை அணு ஆயுதத்தை உருவாக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்றும் இருவரும் ஒரு தீர்மானத்தை நிலைக்கொண்டுள்ளனர்.
அத்துடன், இந்த போர்பதற்றத்திற்கு நிரந்தர தீர்வினை விரைவில் பெற ஈரான் விரைவில் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இதன்போது ஆணித்தரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
