மத்திய கிழக்கு அழிவடையும் வாய்ப்பு.. ஜோர்டான் மன்னர் எச்சரிக்கை!
பலஸ்தீன நாடு உருவாகும் வகையில் அமைதி முயற்சிகள் மேற்கொள்ளப்படாவிட்டால் மத்திய கிழக்கு அழிந்துவிடும் என்று ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிராந்தியத்திற்கான 20 அம்ச அமைதித் திட்டம் குறித்து எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் நடைபெறும் ஒரு உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்னர் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்தப் பிரச்சினையை இப்போது தீர்க்கவில்லையென்றால், அரபு மற்றும் முஸ்லிம் உலகங்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை காணவில்லையென்றால், மத்திய கிழக்கு அழிந்துவிடும் என்று மன்னர் அப்துல்லா கூறியுள்ளார்.
தோல்வியுற்ற முயற்சிகள்
அமைதிக்கான பல தோல்வியுற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தநிலையில், இரு நாடுகளுக்கான தீர்வை செயற்படுத்துவது மற்றும் இஸ்ரேலுடன் சேர்ந்து மேற்குக் கரையிலும் காசாவிலும் ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசை உருவாக்குவது மட்டுமே ஒரே பதிலாக இருக்கும் என மன்னர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
