செவ்வந்தியின் தோற்றத்தில் நேபாளத்தில் சிக்கிய யாழ். பெண்! குழப்பத்தில் பொலிஸார்
இஷாரா செவ்வந்தியுடன் சேர்த்து நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் செவ்வந்தியின் உருவ ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இருவரின் உருவ ஒற்றுமை விசாரணை அதிகாரிகளை திடுக்கிட வைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செவ்வந்தியுடன் இணைத்து கைது..
பிரபல பாதாள உலகக் குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவவை கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குள் வைத்து சுட்டுப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி இதுவரை நாட்களும் தலைமறைவாக இருந்தார்.
செவ்வந்தியை தொடர் விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டிருந்த நிலையில், இன்று காலை நேபாளத்தில் வைத்து இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டதுடன், அவருடன் இணைத்து மேலும் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
யாழ்ப்பாணம், கம்பஹா, நுகேகொடை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு இஷாரா செவ்வந்தியுடன் இணைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.



