மித்தெனிய கஜ்ஜாவின் மகன் கைது
கடந்த ஆண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மித்தெனிய கஜ்ஜாவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ததங்கல்லே பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கல்லே பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின்போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி கண்டுபிடிப்பு
கைப்பற்றப்பட்ட துப்பாக்கியானது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட போல்ட் ஆக்ஷன் வகை 12 போர் துப்பாக்கி என்று சோதனையிட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீரகெட்டிய, யாகஸ்முல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதுடன், சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மித்தெனிய பொலிஸ் பிரிவில் கடந்த ஆண்டு (2025 பிப்ரவரி) இரண்டு குழந்தைகளுடன் சேர்த்து துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட விதானகமகே அருண பிரியந்தா என்ற ‘மித்தெனிய கஜ்ஜா’வின் மகனே கைது செய்யப்பட்ட சந்தேக நபர் என்று சோதனையிட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் முன்னிலைபடுத்தப்பட்டு, தங்கல்லே நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளார்.
ஷிரந்திக்கு அவசர அறுவை சிகிச்சை! நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் சிக்கல் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு