முக்கிய அதிகாரியை நீக்கிய ட்ரம்ப்.. சொந்த கட்சியால் ஏற்படும் சிக்கல்
அமெரிக்க இடைத்தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்த அதிரடி நீக்க முடிவுகள் மற்றும் நிர்வாக மாற்றங்கள் சொந்தக் கட்சிக்குள்ளேயே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
தேர்தல் தோல்விக்குத் தனது நிர்வாக அதிகாரிகளையே காரணமாகச் சுட்டிக்காட்டும் ட்ரம்ப், முக்கிய அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இருப்பினும், அவரது இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளும் ஈரான் போர் அணுகுமுறையுமே கட்சியின் சரிவுக்கு முதன்மை காரணம் என மூத்த குடியரசுக் கட்சித் தலைவர்கள் மற்றும் செனட்டர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி அவரிடமிருந்து விலகத் தொடங்கியுள்ளனர்.
இதனால் வாஷிங்டன் அரசியல் வட்டாரத்தில் ட்ரம்பிற்கு எதிரான உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,