நுண்நிதி - கடன் திருத்தச் சட்டமூலம்:15,000 நிதி அமைப்புக்கள் நெருக்கடியில்
நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு சட்ட மூலத்தால் குறைந்த வட்டியில் கடன் வழங்கி வரும் சுமார் பதினைந்து ஆயிரம் (15,000) சமூக நிதி அமைப்புகள் நெருக்கடிக்கு உள்ளாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் சமூக சேமிப்பு மற்றும் நிதி சேவைகள் ஒழுங்குபடுத்தலை நீக்காதிருந்தால் பாரிய பாதிப்புக்கள் ஏற்படும் என தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
குறைந்த வட்டி வழங்கும் நிறுவனங்கள்
பல்வேறு நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் 35 வீதம் முதல் 65 வீதம் வரை அதிக வட்டியில் கடன் வழங்குவதாலும், சில நிறுவனங்கள் தினசரி வட்டி மற்றும் மூலதனத் தொகையின் தவணைகளை வசூலிப்பதாலும் கிராமப்புற மக்கள் கடுமையான சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
அதிக வட்டி வசூலிப்பின் காரணமாக நுண்நிதி கடன் பெற்ற பெரும்பாலானோர் தற்போது கடன் சுமையாளர்களாக மாறியுள்ளதாகவும், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கடன் நெருக்கடியை எதிர்கொள்ளும் நுண்நிதி பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் அபிவிருத்தி இலக்குகளை முன்னெடுத்து செல்லவும்,
சொத்துகளை உருவாக்கி கடன் சிக்கலில் இருந்து விடுபடவும் சமூக அடிப்படையிலான சேமிப்பு மற்றும் கடன் சேவை அமைப்புகளை நாடி வருகின்றனர்.

முன்மொழியப்பட்ட சட்ட மூலத்தில் சமூக சேமிப்பு மற்றும் நிதி சேவை வழங்குநர்கள், பணம் வட்டிக்கு கொடுப்போர் மற்றும் நுண்நிதி வழங்குநர்கள் ஒரே வகைப்படுத்தலுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சமூக அடிப்படையிலான சேமிப்பு மற்றும் கடன் சேவை அமைப்புகள் குறைந்த வருமானம் பெறுவோருக்கு, குறிப்பாக பெண்களுக்கு, சொத்து மற்றும் வருமானத்தை அதிகரிக்க பங்களித்து வருகின்றன.இவை பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.