மெட்டாவின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் ஊழியர்கள்
இன்ஸ்டாகிராம், வட்ஸப், பேஸ்புக் போன்ற தளங்களை நிர்வகிக்கும் மெட்டா, இன்று முதல் (10) தங்கள் ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டுக்காக புதிய ஊழியர்களை பணியமர்த்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மார்க் ஸுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா, தங்கள் ஊழியர்களின் செயல்திறன் சார்ந்து பணிநீக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
ஊழியர்களின் வேலை
இதன் காரணமாக வேலையில் சரியான திறனை நிரூபிக்காத ஊழியர்களின் வேலை பறிக்கப்படும் என மெட்டா அறிவித்துள்ளது.
இதற்கான பட்டியலையும் நிறுவனம் தயார் செய்து, இன்றுமுதல் பணிநீக்க நடவடிக்கைகளை தொடங்குகிறது.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த முதலீடுகளை சீர்படுத்தவும், எதிர்பார்த்த அளவுக்கு பணியாற்றாத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதென மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை மூலம் இந்த ஆண்டுக்கான நிதிநிலையை திட்டமிடவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
உடனடி பணிநீக்கம்
இது குறித்து வெளியான அறிக்கையில், மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் கடந்த ஜனவரி மாதத்தில் ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் சரியாக பணியாற்றாதவர்களை உடனடி பணிநீக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்ட், அமேசான், சேல்ஸ்ஃபோர்ஸ் உள்ளிட்டவை ஆயிரக்கணக்கான ஊழியர்களை தொடர்ச்சியாக பணிநீக்கம் செய்து வருகின்றன.
அந்த வரிசையில் மெட்டா நிறுவனத்தின் முடிவால் ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
