தேசிய வைத்தியசாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட வைத்தியரால் குழப்பம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் துணை செயற்பாட்டு ஜெனரலின் அறைக்குள் இன்று (14) காலை அடாத்தாக ஒரு பெண் நுழைந்து அவரது இருக்கையில் அமர்ந்துள்ளார்.
அவர், மனநல சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.
வைத்தியரால் குழப்பம்
மேலும், குறித்த பெண் தெஹிவளை பகுதியில் உள்ள ஒரு சுகாதார நிறுவனத்தில் பணிபுரியும் மருத்துவர் என தெரியவந்துள்ளது.
இன்று காலை 10 மணியளவில் தேசிய மருத்துவமனையின் துணை செயற்பாட்டு ஜெனரலின் அலுவலகத்திற்கு வந்த குறித்த பெண், அவரை அச்சுறுத்தியதாகவும், அவர் அறையில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
துணை செயற்பாட்டு ஜெனரல் தனது இருக்கையை விட்டு வெளியேறியவுடன், சம்பந்தப்பட்ட வைத்தியர் இருக்கையில் அமர்ந்து தனது கடமைகளை முறையாகச் செய்ய முடியாவிட்டால் பதவி செய்ய வேண்டும் என்று கூச்சலிட்டதாகவும் தெரியவருகிறது.
அப்போது அதிகாரிகள் குறித்த பெண்ணை தேசிய வைத்தியசாலையின் மனநல சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்துள்ளனர்.



