அதிகரிக்கும் மரணங்கள் : எரிபொருள் வரிசையில் காத்திருந்த இருவர் உயிரிழப்பு
பம்பலப்பிட்டி மற்றும் பயாகல பகுதிகளில் எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருந்த வயோதிபர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பம்பலப்பிட்டி
பம்பலப்பிட்டி ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச் சென்ற 60 வயதான ஒருவர் திடீரென சுகயீனமுற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றிரவு சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த நபர் இன்று அதிகாலை உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் – மதுரங்குளி பகுதியைச் சேர்ந்த இவர், இராஜகிரிய – ஒபேசேகரபுர பகுதியிலுள்ள தமது மகளுடன் வசித்து வந்த நிலையில், நேற்றிரவு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காகச் சென்றுள்ளார்.
இவரின் ஜனாஸா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெலிக்கடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பயாகல
பயாகல பிரதேசத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
திடீர் மாரடைப்பு
சுகயீனம் காரணமாக களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை இந்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொரட்டுவை பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுபாடு காரணமாக எரிபொருள் வரிசையில் காத்திருந்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
அவற்றில் பல இறப்புகள் திடீர் மாரடைப்பு காரணமாக நிகழ்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,
இந்த இரு மரணங்களுடன் எரிபொருள் வரிசைகளில் பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கை 16
ஆக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக தகவல்: ராகேஷ்
எரிபொருள் வரிசையில் உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றிய மக்கள் (Video) |





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
