நானுஓயாவில் மாயமான குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாரண்டன் பகுதியில் நேற்றிரவு முதல் காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (09.09.2023) காலை கிரிமிட்டிய பகுதியில் உள்ள சிறிய நீரோடையில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நானுஓயா - கிலாரண்டன் கீழ் பிரிவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையே (வயது 49) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
நானுஓயா - கிரிமிட்டி நகரப் பகுதிக்குப் பொருட்கள் வாங்குவதற்குச் செல்வதாகக் கூறிவிட்டு நேற்றிரவு வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
அவர் திருப்பி வராததால் குடும்பத்தினரும், பொதுமக்களும் இணைந்து தேடுதல் நடத்தினர். இந்நிலையில், இன்று காலை சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்துப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. இது தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
