மட்டக்களப்பு வாகன விபத்தில் 13 வயது சிறுமி பலி
மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் ஓட்டமாவடி தொடருந்து கடவைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து சம்பவமானது தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த 13 வயது சிறுமி வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை மோட்டார் சைக்கிளின் ஓட்டுனரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இவ்விபத்துடன் தொடர்புடைய தனியார் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





படப்பிடிப்பில் கொண்டாட்டத்தில் இறங்கிய கார்த்திகை தீபம் சீரியல் பிரபலங்கள்... என்ன ஸ்பெஷல், போட்டோஸ் இதோ Cineulagam

அதிக அளவில் நஷ்டம்.., தான் விளைவித்த காய்கறியை வைத்து 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கும் விவசாயி News Lankasri
