உள்ளூர் துப்பாக்கி மற்றும் வெடி பொருட்களுடன் சந்தேக நபர் கைது
திருகோணமலை - புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிபுர பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ஹக்கபட்டஸ் வெடி பொருட்களுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
விசேட பொலிஸ் அதிரடி படையினரின் சுற்றிவளைப்பின் போதே இன்று (06.2.2024) சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புல்மோட்டை டி-10 மணிபுர பகுதியைச் சேர்ந்த புஞ்சிபண்டாகே இந்திக சுகத் பண்டார (31வயது) எனவும் தெரியவருகிறது.
சந்தேக நபர் கைது
புல்மோட்டை விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து குறித்த சந்தேக நபரை சோதனையிட்டபோது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் எட்டு ஹக்கபட்டஸ் என்று அழைக்கப்படும் வாய் வெடிகளுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் சந்தேகநபர் புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
