யாழ்.நெல்லியடியில் கைக்குண்டுடன் சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (10.10.2023) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி துன்னாலை பகுதியில், நெல்லியடி பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பாட்டார்.
குற்றச்செயல்
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும், இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் குறித்த நபருக்கு தொடர்பு இருப்பதாவும், வவுனியாவை சேர்ந்த நபர் நீண்ட காலமாக துன்னாலை பகுதியில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை அல்வாய் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நெல்லியடி பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
