மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் முதல் மின்கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(10.10.2023) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
கட்டணத்தை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நாள் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்று குறித்த அதிகாரி கூறியுள்ளார்.
21 நாட்கள் அவகாசம்
மேலும், பொதுப் பயன்பாட்டுச் சட்டத்தின்படி பொதுமக்களின் கருத்துகளைப் பெற 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இம்மாதம் 18ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் மக்களின் வாய்மூலம் கருத்துக்களை பெற்றுக்கொள்ள சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னரே அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.