சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோத கடலட்டை பிடித்த 7 பேர் கைது
மன்னார் - சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 07 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது சம்பவம் நேற்று புதன்கிழமை (13) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சிலாவத்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சிலாவத்துறை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நீரில் மூழ்கி கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த நிலையில் 07 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சட்ட நடவடிக்கை
இதன் போது 02 படகுகள், டைவிங் கருவிகள் மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுமார் 874 கடல் அட்டைகளும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னாரைச் சேர்ந்த 22 வயதுக்கும் 48 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர்.
07 பேரும் அவர்களின் உடைமைகள் மற்றும் கடல் அட்டைகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
