நவாலியில் இடம்பெற்ற சோமசுந்தரப் புலவர் நினைவரங்கம்
யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம் நடத்திய ஆடிப்பிறப்பு விழாவும் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் நினைவரங்கமும் 17.07.2024 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு நவாலி மகாவித்தியாலயத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் நவாலியூர் சோமசுந்தர புலவரின் திருவுருவச் சிலைக்கும் பாடசாலை நிறுவுனர் பண்டிதர் தம்பையாவின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் கி. கிருஷ்ணானந்தா வாழ்த்துரையையும், ஜீவா சஜீவன் தொடக்கவுரையையும் வழங்னியிருந்தனர்.
வாழ்த்துரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்துறைப் பேராசிரியர், செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் ஆடிப்பிறப்பும் நவாலியூர் சோமசுந்தரப்புலவரும் என்ற பொருளில் சிறப்புரை ஆற்றியுள்ளார்.
நிகழ்வில் தமிழ் சங்க பொதுச் செயலாளர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன், யாழ்ப்பாணம் மறைக்கோட்ட முதல்வரும் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவருமாகிய அருட்பணி ஜெரோ செல்வநாயகம், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறை விரிவுரையாளர்களான கலாநிதி விஜயபாஸ்கர், ம. சத்தியகுமார், இ. சர்வேஸ்வரா நடனத்துறை முன்னாள் தலைவர் கலாநிதி கி. அருட்செல்வி தமிழ்ச் சங்க பொருளாளர் லோ. துஷிகரன் ஆட்சிக் குழு உறுப்பினர்காளான ந. ஐங்கரன் செ. நிவேதன் விரிவுரையாளர் வேல் நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |