சாவகச்சேரியில் அமைந்திருந்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபி இடித்தழிப்பு!
சாவகச்சேரி - நுணாவில் சந்தியில் அமைந்திருந்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவுத்தூபி கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தனிநபர் ஒருவரினால் இடித்தழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இடித்தழிப்பு
அத்தோடு, அதனை இடித்தவர் மீண்டும் அந்த நினைவுத் தூபியை கட்டித் தருவதாக சாவகச்சேரி நகரசபையினருக்கு வாக்குறுதி அளித்திருந்த நிலையில் இதுவரை அந்த தூபி அமைக்கப்படவில்லை.
அத்துடன் அதனை இடித்தழித்த நபர் தூபியை கட்டித் தர முடியாது என்று தற்போது பிரதேச சபையினருடன் முரண்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
38ஆவது நினைவு தினம்
விடுதலைக்காக உயிர் நீத்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் 38ஆவது நினைவு தினம் இன்று வல்வெட்டித்துறை தீருவில் நினைவு இடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
நினைவு சுடர் ஏற்றி நினைவுச் சுடரேற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.கே சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் சட்டத்தரணி காண்டீபன் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




