படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்
கொக்குவிலில் இலங்கை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இன்று (20.10.2023) பல்கலைக்கழக வளாகத்தின் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுட்டுப்படுகொலை
படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோரின் உருவப் படங்களுக்கு மலர் தூவி, ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கை பொலிஸாரால் 2016ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் திகதி, கொக்குவில் குளப்பிட்டியில் இவ்விரு மாணவர்களும் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா
விஜயகுமார், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் நெவில்குமார் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலதிக செய்திகள்: தீபன்



