கரு முகிலும் கண்ணீர் சிந்தும் முகமாக கொட்டும் மழையிலும் தேவிபுரத்தில் இடம்பெற்ற நினைவேந்தல்
முல்லைத்தீவு - தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இடைவிடாத கொட்டும் மழையிலும் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.
மாலை 06.05மணிக்கு மணி ஓசை எழுப்பப்பட்டு, தொடர்ந்து அகவணக்கம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
அந்தவகையில் பிரதான பொதுச்சுடரினை மாவீரர் ஒருவரின் தந்தையான சிறீதரனால் ஏற்றப்பட்டுள்ளது.
மாவீரர்களின் உறவுகள்
அத்தோடு சமநேரத்தில் ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டதுடன், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர்சொரிந்து உணர்வெழுச்சியுடன் நினைவேந்தலை மேற்கொண்டனர்.
மேலும் குறித்த மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களின் உறவுகள், பொதுமக்கள் , முன்னாள் போராளிகள் உணர்வெழுச்சியுடன் மாவீரர்நாள் நினைவேந்தலினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 7 மணி நேரம் முன்

பிரித்தானிய அரச குடும்பத்தில் கோவிட் தடுப்பூசியால் புற்றுநோய்: அமெரிக்க மருத்துவரால் வெடித்த சர்ச்சை News Lankasri
