அமர்வுகளில் பங்கேற்க முடியாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இன்றைய தினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களினால் பங்குபற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது.
நாட்டில் நிலவி வரும் எரிபொருள் பிரச்சினைகள் காரணமாக தம்மால் அமர்வுகளில் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் வரிசையில் காத்திருப்பதற்கு அச்சம்

எரிபொருள் பிரச்சினைகளை எதிர்நோக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து நாடாளுமன்றிற்கு அறிவித்துள்ளனர்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகள் எரிபொருள் வரிசையில் காத்திருப்பதற்கு அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மக்களினால் எதிர்ப்பு வெளியிடப்படும் என அவர்கள் அஞ்சுகின்றனர். மக்கள் தாக்கக் கூடும் என்ற அச்சத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களை எரிபொருள் வரிசைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுவதாக சில சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
| இராணுவத்தினரை அழைக்கும் விசேட வர்த்தகமானி ஜனாதிபதியால் வெளியீடு |
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan