ஊதிய மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள், நேற்று(24) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நேற்று(24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
விசேட வர்த்தமானி
அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நோக்கில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமீபத்தில் 22.06.2026 திகதிதியிட்ட விசேட வர்த்தமானி எண் 2494/05 மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவை நிறுவியிருந்தார்.
ஆணைக்குழுவின் தலைவராகப் பணியாற்றும் ஓய்வுபெற்ற அமைச்சு செயலாளர் அசோகா பீரிஸ் மற்றும் அதன் மற்ற உறுப்பினர்களான ஓய்வுபெற்ற நீதியரசர் கே. கே. ஏ. வி. சுவர்ணாதிபதி, என். பி. எம். ரணதுங்க, மருத்துவர் ஆர். டபிள்யூ. ஜயந்த, கலாநிதி ஜி. எம். முதித் சுஜீவ, ஓய்வுபெற்ற பிரிகேடியர் பி.ஜே.பெர்னாண்டோ, ஏ.எல். மொஹமட் முக்தார், எஸ்.டி.பி. ரத்நாயக்க, ஏ.டபிள்யூ. லால் சந்திர வீரகோன், ஜி.ஏ.பி. பத்மநாத, கே. சரத் லால் பெரேரா மற்றும் ஆணைக்குழுவின் செயலாளர் டி.எம்.சி. நாலக திஸாநாயக்க ஆகியோர் தங்களுக்கான நியமனக் கடிதங்களை இன்று பெற்றுள்ளனர்.



