வரி மோசடிகளில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முட்டுக்கட்டை
வரி மோசடிகளில் ஈடுபடக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களை அறிவிப்பதற்கான வழியை ஏற்படுத்துகிறது.
மோசடிகளில் ஈடுபட முடியாது
இதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மோசடிகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக இலங்கை அரசாங்கம் அண்மையில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வரி விகிதங்களை அதிகரிப்பதுடன், வரி வலையமைப்பை விரிவுபடுத்தவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில் வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு நிகராக, வரி வருவாய் வசூல் பொறிமுறையை பலப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உயர்மட்டக் குழு பரிந்துரைத்துள்ளது.
இதேவேளை 2024 இல் 4,106 பில்லியன் ரூபாய்களை வரி மூலம் திரட்டவேண்டும் என்று உள்நாட்டு இறைவரி திணைக்களம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |