முல்லைத்தீவு உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்கள் உறுதி எடுக்கும் நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டவர்களின் உறுதி எடுக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று,புதுக்குடியிருப்பு,மாந்தைகிழக்கு,துணுக்காய் பிரதேசங்களை சேர்ந்த 12 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த நிகழ்வு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் பிரதேச சபை பொது மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
ஜெகதீஸ்வரன் எம்.பி
நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் கலந்துகொண்டுள்ளார்.
வேட்பாளர்கள் உறுதி உரை எடுத்த அவர்களின் வகிபாகங்கள் தொடர்பில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
“இலங்கையில் வரலாற்றி முதல் தடவையாக வன்னி தேர்தல் தொகுதியில் 57 ஆசனங்களை பெற்றுள்ளது.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் மூலமாக பிரதேச சபைகளுக்கு அதிகளவான நிதியீட்டங்களை பெற்றுக்கொடுத்து” என தெரிவித்துள்ளார்.





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
