வாகனத்திற்கு டீசல் இன்றி நடுவீதியில் தவித்து நின்ற நாடாளுமன்ற உறுப்பினர்
எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெத ஆராச்சி இன்றையதினம் தங்காலை பகுதிக்குச் சென்றிருந்த வேளை, அவரது வாகனத்தில் டீசல் தீர்ந்ததன் காரணமாக இக்கட்டான ஒரு நிலையை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
தங்காலை பகுதிக்குச் சென்ற அவர் தனது வாகனத்திற்கு தேவையான டீசல் இல்லை என்ற காரணத்தினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நாடிச் சென்றுள்ளார்.
எனினும், அங்கும் டீசல் இல்லை என தெரிவித்து, அங்கிருந்த மீனவர்களிடம் தனது உத்தியோகபூர்வ வாகனத்திற்கான டீசலைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதன்போது அங்கிருந்த மீனவர்களிடம் இன்று தாம் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அவர் இன்றையதினம் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளவில்லை என கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.