நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் செயற்பாடு! கேள்வி எழுப்பியுள்ள பொது அமைப்பு
நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைவாக உறுப்பினர்கள் நடந்து கொள்வது இன்றியமையாதது என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்(Caffe) தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் கேள்விக்குரிய வகையில் நடந்து கொள்வதற்காக மக்கள் உறுப்பினர்களை தெரிவு செய்வதில்லை எனவும் அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் இருந்து சுயேச்சைக் குழுவின் கீழ் இவ்வருடம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இராமநாதன் அர்ச்சுனா(Ramanathan Archchuna), முதல் நாளிலேயே சர்ச்சைக்குரிய வகையில் நடந்துகொண்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவருக்கான இருக்கை
அதற்கு அவர் பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து பல்வேறு காணொளிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டதுதான் காரணம் என குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இராமநாதன் அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றையும் சமர்ப்பித்துள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைய உறுப்பினர்கள் நடந்து கொள்வது இன்றியமையாதது என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, “10ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய எம்.பி.க்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நவம்பர் 25 முதல் 27 வரை நடைபெற உள்ளது.
பாரம்பரிய நடைமுறை
பாரம்பரியமாக புதிய நாடாளுமன்றம் தொடங்கும் வேளையில் நடைபெறும் இந்த மூன்று நாள் செயலமர்வில், நாடாளுமன்ற உறுப்பினரின் பங்கு, நாடாளுமன்ற சிறப்புரிமை, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் செயல்முறை, நாடாளுமன்றக் குழு செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் அரசியலமைப்பின் விதிகள், மேலும், மின்னணு வாக்குப்பதிவு முறையைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிப்பதற்கான நடைமுறை அமர்வும் நடத்தப்படும்.
தொடர்ந்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தொடர்பான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்“ என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan