இந்திய துணை ஜனாதிபதியுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்: வலுசக்தி உள்ளிட்ட பல்துறைகளில் இணக்கம்

Government Of Sri Lanka Sri Lankan Peoples India Sri Lanka Government NPP Government
By Rakesh Apr 20, 2026 08:17 AM GMT
Report

இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உப ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையிலான இருதரப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் நேற்று(19.04.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இந்திய உப ஜனாதிபதியை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அன்புடன் வரவேற்றுள்ளார்.

தயவு செய்து அவதானமாக இருக்கவும்! முழு இலங்கைக்கும் சிவப்பு எச்சரிக்கை

தயவு செய்து அவதானமாக இருக்கவும்! முழு இலங்கைக்கும் சிவப்பு எச்சரிக்கை

இந்திய துணை ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும் என்பதால், தனக்கு வழங்கப்பட்ட சிறப்பான விருந்தோம்பலுக்குத் துணை ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்திய துணை ஜனாதிபதியுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்: வலுசக்தி உள்ளிட்ட பல்துறைகளில் இணக்கம் | Meeting With The Vice President Of India

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேம்படுத்துவது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்திய அரசு இணக்கம் தெரிவித்த விடயங்கள்

இதன்படி, பின்வரும் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. பொருளாதாரம் மற்றும் வர்த்தகம்

வலுசக்தி பாதுகாப்பு, துறைமுக அபிவிருத்தி மற்றும் முதலீடுகளை அதிகரித்தல்.

2. மனிதவள மற்றும் தொழில்நுட்பம்

இந்தியாவின் தொழில்நுட்ப வெற்றிகளைப் பாராட்டிய ஜனாதிபதி, இலங்கையின் அரச துறையை டிஜிட்டல் மயமாக்கும் பணிகளில் இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

3. கடற்றொழிலாளர்களின் பிரச்சினை

இரு நாடுகளின் கட்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதன் அவசியம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்திய துணை ஜனாதிபதியுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்: வலுசக்தி உள்ளிட்ட பல்துறைகளில் இணக்கம் | Meeting With The Vice President Of India

முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்கள்

டிட்வா சூறாவளி அனர்த்தத்தின் போது இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி மற்றும் இந்திய வரவு - செலவுத் திட்டத்தில் இலங்கைக்காக நிதி ஒதுக்கீடு செய்தமைக்காக ஜனாதிபதி நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்ட வலுசக்தி நெருக்கடியின் போது, 38 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை இந்தியா அவசரமாக வழங்கியதையும் ஜனாதிபதி நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்திய - இலங்கை நட்புறவை மேலும் உயரிய நிலைக்குக் கொண்டு செல்வதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும் என இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்திய துணை ஜனாதிபதியுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்: வலுசக்தி உள்ளிட்ட பல்துறைகளில் இணக்கம் | Meeting With The Vice President Of India

அத்துடன், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய நிதியுதவியுடனான வீட்டுத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

இந்த உயர்மட்டச் சந்திப்பில், இந்தியத் தரப்பில் மத்திய இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரும், இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.  

இந்திய துணை ஜனாதிபதியுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்: வலுசக்தி உள்ளிட்ட பல்துறைகளில் இணக்கம் | Meeting With The Vice President Of India

புதிய பேச்சுவார்த்தைகளுக்காக ஜே.டி. வேன்ஸ் பாகிஸ்தான் செல்கிறார்..

புதிய பேச்சுவார்த்தைகளுக்காக ஜே.டி. வேன்ஸ் பாகிஸ்தான் செல்கிறார்..

அமெரிக்காவின் நடவடிக்கையையடுத்து அதிரடியாக உயர்ந்துள்ள எண்ணெய் விலை

அமெரிக்காவின் நடவடிக்கையையடுத்து அதிரடியாக உயர்ந்துள்ள எண்ணெய் விலை


7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US