போரினால் இறந்தோர் நினைவு தொடர்பான வடக்கு கிழக்கு ஆயர்களுடனான சந்திப்பு! (Photo)
அண்மையில் வடக்கு, கிழக்கு ஆயர்கள் பேரவையினால் வெளியிடப்பட்ட “போரினால் இறந்தோர் நினைவு” எனும் தலைப்பிலான அறிக்கை பல தரப்பினருக்கும் அதிருப்தியையும், கவலையையும் தமிழ்த் தேசியத்தின் பால் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு கிழக்கு சிவில் சமூகங்களாக இவ்விடயம் தொடர்பாக நடைபெற்ற பல்வேறுபட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில், சிவகுரு ஆதின முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகளும், கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் இணைப்பாளரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளருமான ச.சிவயோகநாதனும், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையும், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவேல் ஆண்டகையும், யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையும், மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையும் சந்தித்து, மேற்படி விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
இக்கலந்துரையாடலில், மாவீரர் பெற்றோர்களினதும், தமிழ் தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்ட பல்வேறு தரப்பினரதும் ஆதங்கங்கள், கவலைகள் மற்றும் கருத்துக்கள் என்பன ஆயர்களிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலின் போது, ஆயர்கள் பேரவையால் அறிவிக்கப்பட்டிருந்த போரினால் இறந்தோருக்கான நினைவு கூரலை குறிப்பிட்டிருந்த 20.11.2021 அழைப்பை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு, வடக்கு கிழக்கு சிவில் சமூகங்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri
