சுவிஸ் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் கமல் குணரத்ன சந்திப்பு
சுவிஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கு இடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இராணுவ ஒத்துழைப்பு
இது தவிர இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இராணுவ ஒத்துழைப்பு மற்றும் இந்நாட்டு படைகளுக்கு வழங்கக்கூடிய பயிற்சி வாய்ப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோத போதைப்பொருள் நாட்டிற்குள் செல்வதைத் தடுப்பதற்கு சட்டத்தை நடைமுறைப்படுத்த முகவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் சுவிஸ் பாதுகாப்பு ஆலோசகருக்கு கமல் குணரத்ன அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 19 மணி நேரம் முன்

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா News Lankasri

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy News Lankasri
