பொலிஸ் மா அதிபருடனான சந்திப்பை எதிர்பார்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாட, பொலிஸ் மா அதிபரிடம் (IGP) இருந்து விரைவில் சந்திப்பு நேரம் கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தமது பாதுகாப்பு குறித்து கலந்துரையாட பொலிஸ் மா அதிபரைச் சந்திக்கும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
விரைவில் சந்திப்பு
இதற்கமைய, பொலிஸ் மா அதிபரை நாடாளுமன்றத்திற்கு அழைக்கக் கோரி கடந்த 27ஆம் திகதி சபாநாயகரிடம் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சபாநாயகர் தற்போது வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவரது அறிவுறுத்தலின் பேரில் எதிர்க்கட்சியின் இந்தக் கோரிக்கையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்புவதற்கு சபாநாயகர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க மேலும் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து பல விடயங்கள் குறித்து கலந்துரையாட வேண்டிய அவசியம் இருப்பதால், பொலிஸ் மா அதிபருடனான சந்திப்பு விரைவாகக் கிடைக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        