தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் (Photos)
தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா மில்வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றுகின்றது.
இன்று (14.05.2023) காலை 10.30 மணிக்கு தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இக் கூட்டம் நடைபெறுகின்றது.
யாப்பு திருத்தம்
இக்கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் யாப்பு திருத்தம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், செயலாளர் ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், சி.சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், சி.சிவமோகன், பா.அரியநேந்திரன், ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சரவணபவன், பீட்டர் இளஞ்செழியன், மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri

மோகன்லால் படத்தை பின்னுக்கு தள்ளி, மலையாளத்தில் நம்பர் 1 இடத்தை பிடித்த லோகா!! மாபெரும் வசூல் சாதனை Cineulagam
