திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் சம்பந்தனால் தடுக்கப்பட்டுள்ளது! குகதாஸன் தகவல்(Photo)
திருகோணமலை நகரில் நெல்சன் திரையரங்கிற்கு அருகில் 4 அரச மரம் நிற்கும் காணியில் நடைபெறவிருந்த தாய்லாந்து பிக்குமாரின் பிரித் ஓதும் நிகழ்வும் பாதயாத்திரை செல்லும் வழித்தடமும் மாற்றப்பட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தலைவர் எஸ்.குகதாஸன் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை அலுவலகத்தில் நேற்று (13.05.2023) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை
தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,“தமிழரசு கட்சி குழுவினருக்கும் அரசாங்க அதிபருக்கும் இடையிலான சந்திப்பின் போது அரசாங்க அதிபர் இந்த உறுதி மொழிகளை வழங்கினார்.
மேலும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் விளைவாகவே இம்மாற்றம் இடம்பெற்றது.”என தெரிவித்துள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில், மாவட்ட கிளையின் செயலாளர் கே.செல்வராஜா. கிளையின் பொருளாளர் வெள்ளத்தம்பி சுரேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
