கிழக்கு மாகாண ஆளுநருக்கும் லங்கா ஐஓசி அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் லங்கா ஐஓசி (எல்ஐஓசி) சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (10) திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்தும் குறிப்பாக திருகோணமலையில் கவனம் செலுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
நன்கொடை
இதனை அடுத்து, கிழக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாட்டுக்காக, LIOC நிறுவனத்தினர் சிறுநீரக நோயாளிகளுக்கான இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றையும் நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்தனர்.
மேலும், நிலையான அபிவிருத்திக்கான வெளிப்படையான, ஊழலற்ற அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஆளுநர் தனது ஒத்துழைப்பை உறுதியளித்தார்.
லங்கா ஐஓசியின் சிரேஷ்ட முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், லங்கா ஐஓசியின் சிரேஷ்ட உதவி தலைவர் ( கொழும்பு) அம்பர் அஹமட், சிரேஷ்ட உதவி தலைவர் ( திருகோணமலை) நவீன் குமார், ஐஓசியின் பொறியியல் துறை ( கொழும்பு) உதவி தலைவர் சந்தீப் கப்டா மற்றும் ஐஓசியின் பொறியியல் துறை (திருகோணமலை) உதவி தலைவர் B.K. மண்டால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |