அநுரவுடன் 6 நாடுகளின் தூதுவர்கள் திடீர் சந்திப்பு
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் 06 நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று (06.03.2024) மக்கள் விடுதலை முன்னனியின் தலைமையகத்தில் நடைப்பெற்றுள்ளது.
பொருளாதார நிலைமைகள்
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி இராஜதந்திரிகள் விழிப்புணர் வூட்டப்பட்டதோடு நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் பற்றியும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் நாடுகளுடன் பரஸ்பர நன்மதிப்பு மற்றும் ஒத்துழைப்பினை அடிப்படையாகக்கொண்டு செயலாற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் தயார்நிலை பற்றியும் இந்த சந்திப்பின்போது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்கள்.
இந்த சந்திப்பில் பாலஸ்தீனத்தின் தூதுவர் சுஹைர் எம்.எச். துர் ஜாயிட், துருக்கி குடியரசின் தூதுவர் ஆர். டிமெட் செகர்சியோக்லு, பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர் தாரீக் எம்.டி. அரிஃபுல் இஸ்லாம், இந்தோனேசிய குடியரசின் தூதுவர் டீவி குஸ்டினா டோபிங், ஆகியோரும் இந்திதோனேசிய தூதரகத்தின் பிரதம கொன்சல் ஹெரு பிரயிட்னோ, மலேசிய உயர்ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் பின் ஆதம் மற்றும் மாலைதீவு குடியரசின் பதில் தூதுவர் பாத்திமத் கினா ஆகிய இராஜதந்திரிகள் அந்நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் டாக்டர் றிஷ்வி சாலி மற்றும் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் முதித்த நாணாயக்கார ஆகியேர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
