ஜனாதிபதி மாளிகையில் 12 லட்சம் ரூபா பெறுமதியான மருந்து மற்றும் உபகரணங்கள் கொள்ளை
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக சென்றவர்கள், அங்குள்ள மருத்துவ நிலையத்தை தாக்கி, அதில் இருந்த 12 லட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகைக்குள் இருக்கும் மருத்துவ நிலையம் கடற்படையினரால் நடத்தப்பட்டு வந்துள்ளளது.
இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு மத்திய பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றவர்கள், அங்குள் இந்த மருத்துவ நிலையத்திற்குள் புகுந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளதுடன் அங்கு களஞ்சியப்படுத்தி இருந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை கொள்ளையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக கடற்படையினர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri