நாட்டில் சுமார் 252 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு!
நாட்டில் சுமார் 252 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க நிலையத்தின் தலைவர் டொக்டர் சமால் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
Asprin tablet 300m, Diazoxime tablet 50mg, Trimethoprim tablet 100 mg உள்ளிட்ட பல்வேறு மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மருந்து தட்டுப்பாடு
முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் பதவி விலகி ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் தற்போதைய சுகாதார அமைச்சரும், அமைச்சின் செயலாளரும் மருந்துப் பொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதேச மருத்துவமனைகளில் மருந்து கொள்வனவு செய்வதற்காக மருத்துவமனை பணிப்பாளர்களுக்கு நிதி வழங்கும் திட்டமொன்று நடைமுறையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடைமுறையினால் முறைகேடுகள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும், மருந்துப் பொருள் கொள்வனவு கிரமப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
