இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்
நாட்டிற்கு கிடைத்துள்ள அந்நியச் செலவாணியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய வெளிநாட்டு பணியாளர்கள் மூலம் நாட்டிற்கு கடந்த பெப்ரவரி மாதத்தில் 476 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி
இலத்திரனியல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியமை, பல்நோக்கு கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்தியமை, ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தியமை உள்ளிட்ட திட்டங்கள் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் கடந்த வருடம் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் 14% அந்நியச் செலாவணி அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.