மின்சார சேவை பொறிமுறை தொடர்பில் யாழில் விசேட செயலமர்வு
அரச காணி உட்பட்ட காணிக்களுக்குள் குடியிருக்கும் நுகர்வோருக்கு மின்சார சேவையினை வழங்கும் வழங்குனருக்கு பொறிமுறை ஒன்றினை உருவாக்குவதற்கான ஆலோசனை செயலமர்வு ஒன்று யாழில்(Jaffna) இடம்பெற்றுள்ளது.
வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் தலைமையில் நேற்றைய தினம் (05.11.2024) காலை குறித்த செயலமர்வு இடம்பெற்றுள்ளது.
மாவட்ட ரீதியில் கருத்துத் தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மீள்குடியேற்ற பிரதேத்தில் காணிகளை அடையாளம் கண்டு மின்சார இணைப்பை வழங்குவதில் சில பிரச்சினைகள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
காணி உரிமம்
ஏனைய மாவட்டங்கள் போல் காணி உரிமம் தொடர்பில் பிரச்சினைகள் இருந்தாலும் குடியிருப்பாளர்களுக்கான மின்சார இணைப்பை வழங்குவதில் ஒத்துழைப்புக்களை நல்கிவரும் இலங்கை மின்சார சபைக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அரச காணி உட்பட ஏதேனும் காணிக்குள் குடியிருக்கும் நுகர்வோருக்கு மின்சார சேவையினை வழங்கும் பொருட்டு மின்சார சேவையினை வழங்குனருக்கு பொறிமுறை ஒன்றினை உருவாக்குவதற்கான பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டறியும் நோக்கினை அடிப்படையாகக் கொண்டு இந்த செயலமர்வு நடைபெற்றுள்ளது.
குறித்த செயலமர்வில் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின்(PUCSL) பணிப்பாளர் ஜசந்தறது விதான, பிரதிப்பணிப்பாளர் றொசான் வீரசூர்ய, வடக்கு மாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ்.பிரணவநாதன், வவுனியா, முல்லைத்தீவு,கிளிநொச்சி, மன்னாா் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர்கள், இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உட்பட துறைசாா் அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam