சுற்றுலா விடுதிக்கு முன்பாக மீட்கப்பட்ட இத்தாலிய பிரஜையின் சடலம்
பதுளை - எல்ல பிரதேசத்திற்கு வருகை வருகைத்தந்த இத்தாலிய(Italy) பிரஜை ஒருவர், அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு முன்பாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கபோனேரி எண்ட்ரியா(Caponeri Andrea) என்ற 49 வயதுடைய இத்தாலிய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது வெளிநாட்டு கடவுச்சீட்டு மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எல்ல பிரதேசத்திற்கு விஜயம்
நகரில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த அவர், எல்ல பிரதேசத்திற்கு விஜயம் செய்ததாகவும், பின்னர், இன்று(06.11.2024) அதிகாலை 04:30 மணியளவில் ஹோட்டலுக்கு முன்னால் மயங்கி விழுந்ததில் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டள்ளனர்.

இது தொடர்பில் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்ததன் பின்னர் உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
எதிரிகள் மரணத்தை ருசிப்பார்கள்... ட்ரம்பிற்கு ஈராக்கின் துணை இராணுவப் படை பகிரங்க எச்சரிக்கை News Lankasri